தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் - கமல்ஹாசன்
தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சி திருவெறும்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பராசக்தி காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை.
வெற்றிடம் என்று ஒன்று இல்லை, மக்கள் மனதில் இடம் உள்ளது, அதை பிடிப்பது யார் என்பதே கேள்வி. யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story