மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்


மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக  திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்
x
தினத்தந்தி 11 Jan 2020 7:43 AM GMT (Updated: 11 Jan 2020 7:43 AM GMT)

மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

சென்னை

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.  பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திமுக சார்பில்  டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

திமுக வெற்றி பெறும் இடங்களில் பிரச்சினை செய்து தேர்தல் நிறுத்தப்படுகிறது. பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் வரவில்லை என மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

Next Story