27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி: அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி


27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி:  அதிமுக 14 இடங்களிலும்  திமுக 12 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 11 Jan 2020 8:41 AM GMT (Updated: 11 Jan 2020 9:02 AM GMT)

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

சென்னை

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.  பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* திருவாரூரில் முழுமையாக நிறைவடைந்தது மறைமுக தேர்தல்.  மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக. ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு 5 இடம், திமுகவுக்கு 5 இடம்.

 * கரூரை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது.
கரூர் மாவட்ட ஊராட்சி  தலைவராக அதிமுகவின் கண்ணதாசன் தேர்வு.

* திருச்சியை மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது திமுக, 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.

* துக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.  திமுக கூட்டணி அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

* பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யபட்டார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது திமுக.

* தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா வெற்றி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக. அதிமுக, திமுக தலா 14 உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

* நாமக்கல் மாவட்ட ஊராட்சி  தலைவராக அதிமுகவின் சாரதா தேர்வு 

* தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ப்ரீத்தா தேர்வு 

* நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு

* நாகை மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது திமுக   மொத்தமுள்ள 11 ஒன்றியங்களில் 8 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது.

* திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக  மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் திமுக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.

* 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும்  திமுக 12 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

Next Story