ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 5 மணி நிலவரம்


ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 5 மணி நிலவரம்
x
தினத்தந்தி 11 Jan 2020 12:14 PM GMT (Updated: 11 Jan 2020 12:14 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி 14 இடங்களையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை,

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது.  பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்பட்ட 285 ஊராட்சி ஒன்றியங்களில் 150 இடங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் வென்றுள்ளன.

* கம்மாபுரம் ஒன்றிய தலைவராக மேனகா விஜயகுமார்(அதிமுக) தேர்வு செய்யப்பட்டார்.

* கறம்பக்குடி ஒன்றிய துணைத் தலைவராக பரிமளம் (அமமுக) தேர்வு செய்யப்பட்டார்.  திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் பரிமளம் வெற்றி பெற்றார்.

* தொண்டாமுத்தூர் ஒன்றிய துணை தலைவராக கனகராஜ் (அதிமுக) தேர்வு செய்யப்பட்டார்.

* உசிலம்பட்டி ஒன்றிய துணைத் தலைவராக பாண்டி (அமமுக) தேர்வு செய்யப்பட்டார்.  ஒன்றிய தலைவராக ரஞ்சனி (திமுக) ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* கள்ளிக்குடி ஒன்றிய துணைத் தலைவராக கலையரசி (அதிமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

*  தருமபுரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தலில் தேமுதிகவை சேர்ந்த தம்பி ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

* தாரமங்கலம் ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக காங்கிரஸை சேர்ந்த உமா மகேஷ்வரி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் உமா மகேஷ்வரி வெற்றி பெற்றார்.

 * கீரப்பாளையம் ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 2 பெண்கள் போட்டியிட்டனர்.  குலுக்கல் முறையில் துணைத் தலைவராக காஷ்மீர் செல்வி தேர்வானார்.   2 பேரும் சமமான வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

* ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த கோரிக்கை செல்போன் டவர் மீது ஏறி சுயேட்சை கவுன்சிலர் போராட்டம் நடத்தினார். 

* மேலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* ஆரணி அருகே காட்டுகாநல்லூரில் வார்டு உறுப்பினர் வீடு சூறையாடப்பட்டது. வாக்களிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் வீட்டை சூறையாடியதால் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சேலம் : எடப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவராக அதிமுகவின் ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

* சேலம் : கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவராக அதிமுகவின் வைத்தியலிங்க முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story