மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலந்தூர்,
நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாக நீண்ட காலமாக கூறுகின்றனர். அது இட்லி விலை போல்தான். திறமைதான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது. முதன்முதலில் நான் ரூ.250 சம்பளத்துக்கு நடிக்க வந்தேன்.
குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு. இதுபோல்தான் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தனர். பின்னர் அதில் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவதுதான். தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வரவேண்டியதுதான். இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோன்றவை நடந்துகொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ?.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story