மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் விடுவிப்பு + "||" + MK Stalin Security provided CRPF Release

மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் விடுவிப்பு

மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் விடுவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை,

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசின் உயர்மட்ட சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது. இதையடுத்து, சி.ஆர்.பி.எப் வீரர்கள் அனைவரும் இன்று காலை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழக போலீசார் பதினொரு பேர் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.