பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை + "||" + In advance of the Pongal festival For 3 days 50% off on Metro Rail
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15 முதல் 17 வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.