மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை நாளை முதல் முழு அளவில் அமல் + "||" + On national highways The Bostock system in customs will go into effect tomorrow

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை நாளை முதல் முழு அளவில் அமல்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை நாளை முதல் முழு அளவில் அமல்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ‘பாஸ்டேக்’ முறை முழு அளவில் அமலுக்கு வருகிறது.
சென்னை, 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ‘பாஸ்டேக்’ முறை கொண்டு வரப்பட்டது.

அதன்படி, பாஸ்டேக் என்ற தானியங்கி சுங்கக் கட்டணம் செலுத்தும் ஸ்டிக்கர்களை (டேக்) வாகனங்களின் முன்பகுதியில் ஒட்ட வேண்டும்.

இதனால் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் வாகனம், வரிசையில் நிற்காமல், அதற்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் வழியில் செல்லலாம்.

பாஸ்டேக் மூலம் பணம் செலுத்தும் முறை கடந்த டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாளை (15-ந் தேதி) வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் பாஸ்டேக் முறை முழு அளவில் அமலுக்கு வருகிறது.

பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளின் இரு மார்க்கத்திலும் தனியாக ஒரு வழி ஒதுக்கப்பட்டு இருக்கும். அந்த வாகனங்கள் அந்த பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்.

அதை மீறி பாஸ்டேக் பாதையில் சென்றுவிட்டால் அந்த வாகனத்துக்கான சுங்கக்கட்டணத்தில் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும்.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 450 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அமலில் உள்ளது. சென்னையில் 6 சுங்கச்சாவடிகளில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்டேக் மூலம் பல்வேறு தகவல்களை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் வாகன நெருக்கடியை கண்காணித்து அதற்கேற்ப கொள்கையை வகுக்கவும் முடிவு செய்யதுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. உள்பட சிறிய நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பாஸ்டேக்களை பெற்றுக்கொள்ளலாம். அமேசான் செயலி மூலமாகவும் வாங்கலாம். அந்த வங்கிகளின் பெயர் பட்டியலை என்.பி.சி.ஐ. இணையதளத்தில் காணலாம்.

மேலும் வானகரம், சூரப்பட்டு, நல்லூர், மாதூர், பட்டரைபெரும்புதூர், எஸ்.வி.புரம் ஆகிய சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வாங்கிக்கொள்ளலாம். இதற்கு வாகன பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கே.ஒய்.சி. ஆவணங்கள் (அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்றுகள்) அளிக்கப்பட வேண்டும்.

‘மை பாஸ்டேக்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் பயனடையலாம். கார் வைத்திருப்பவருக்கு ரூ.500 என்ற விலையில் பாஸ்டேக்கை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விற்பனை செய்கிறது.

இந்த தகவல் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.