பழையன கழிதலும்.. புதியன புகுதலும்; தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்


பழையன கழிதலும்.. புதியன புகுதலும்; தமிழகம் முழுவதும்  போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
x

பழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. 

ஆனால் இன்றைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறுகிறது.

இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆகிறது. சென்னை நகரை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் போகியன்று ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இந்த நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

பழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்தும்,சிறுவர்கள் மேளம் அடித்தும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

 சென்னை முழுவதும் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் காணப்பட்டது இதனால்  வாகன ஓட்டிகள் அவதிபட்டனர் 


Next Story