மாநில செய்திகள்

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் அதிரடி சோதனை + "||" + Bomb threat to Madurai bus stations; Police raid

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் அதிரடி சோதனை

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் அதிரடி சோதனை
மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குல்  நடக்கும்  என மர்ம போன்  வந்தது. இதை தொடர்ந்து  மதுரையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில்  வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் போலீஸ் பாதுகாப்பும்  அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.