காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்- டி.ஆர்.பாலு


காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்- டி.ஆர்.பாலு
x
தினத்தந்தி 14 Jan 2020 8:37 AM GMT (Updated: 14 Jan 2020 8:37 AM GMT)

காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம், அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என டி.ஆர்.பாலு கூறினார்.

சென்னை

திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக கே.எஸ்.அழகிரி கூறியதால் திமுக நிர்வாகிகளுக்கு வருத்தம். காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம், அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.திமுக - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என கூறினார்.

Next Story