நாட்டை மேலும் உயர்த்துவதற்கு ‘பாரம்பரிய முறையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்’ வெங்கையா நாயுடு பேச்சு

நாட்டை மேலும் உயர்த்துவதற்கு ‘பாரம்பரிய முறையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்’ வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 14 Jan 2020 9:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:18 PM GMT)

‘பொங்கல் போன்ற நம்முடைய பண்டிகைகளை பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவதன் மூலம் நம் நாட்டை மேலும் உயர்த்த முடியும்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை, 

‘பொங்கல் போன்ற நம்முடைய பண்டிகைகளை பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவதன் மூலம் நம் நாட்டை மேலும் உயர்த்த முடியும்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பொங்கல் விழா

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். விழாவையொட்டி பானைகள் வைத்து பொங்கல் வைக்கப்பட்டது.

இதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார். விழாவில் துணை ஜனாதிபதியின் மனைவி உஷா மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சபாநாயகர் பி.தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 2020-ம் ஆண்டு பசுமை புரட்சிக்கான தேசிய விருதை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரம்பரிய முறையில்...

நமது நாகரிகத்தின் தனித்துவ அடையாளத்தை நமது விழாக்கள் நிலை நிறுத்தும். வளமான, அமைதியான, ஒன்றுபட்ட, அனைவரையும் உள்ளடக்கிய, அழகான உலகை கட்டமைக்க இவை ஊக்கமளிக்கும் என்றும் நான் நம்புகிறேன். பாரம்பரிய முறையில் பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் நாட்டை மேலும் உயர்த்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொழிலதிபர்கள் வி.ஜி.பி.சந்தோஷம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், துணைத்தூதர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஜ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story