மாநில செய்திகள்

ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு + "||" + Rajinikanth is entering politics Vice President Venkaiah Naidu talks

ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பொன்விழா

‘துக்ளக்’ வார இதழ் 1970-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி தொடங்கப்பட்டது. துக்ளக் இதழ் தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று பொன்விழா நடந்தது.

துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வரவேற்று பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் கலந்து கொண்டு பொன் விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பன்முகத்தன்மை வாய்ந்தவர்

விழாவில் வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:-

பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு அறிவாளியான சோ ராமசாமி, சனாதன தர்மம் பற்றிய கேள்விக்கே இடமின்றி, பத்திரிகை, திரைப்படம், நாடகம், அரசியல், சட்டம், இலக்கியம் போன்ற துறைகளில் அழியாத தடத்தை விட்டு சென்றுள்ளார். பாரதத்தின் நாகரிக நன்மதிப்புகள் மற்றும் இந்துமத கோட்பாடுகள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவரது தொலைநோக்கு பார்வைக்கு எப்போதும் வழிகாட்டியது.

தேச நலனை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், தீவிரமாகவும், அச்சமற்ற வகையிலும் சோ பின்பற்றிய இதழியல்தான், துக்ளக் இதழுக்கு புகழை தேடித்தந்தது. அவசரநிலை காலத்தில் அவர் காட்டிய எதிர்ப்பும், முகப்பு பக்கத்தை கருப்பாக்கி, பழங்கால திரைப்படமான ‘சர்வாதிகாரி’ படம் பற்றிய விமர்சனத்தை நூதன முறையில் வெளியிட்டதும் என்றென்றும் நமது நினைவில் நிற்கும்.

அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்

துக்ளக் மூலம் இதழியலுக்கு சோ ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இது, அவரது பொது வாழ்வு மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக திகழும். சோவின் இதழியல் நடை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு, அவரது மனஉறுதி, தைரியம், புத்திக்கூர்மை, நையாண்டி மற்றும் அறிவார்ந்த எழுத்துகள் மற்றும் விமர்சனங்கள் அனைவரையும் உலுக்குவதாக இருக்கும். நான் அரசியலை விட்டு வெளியில் வந்துவிட்டேன். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் ஜனநாயக அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும், பத்திரிகைகள் முக்கிய பங்கு வகித்தன. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களின் எல்லை, மின்னணு ஊடகங்களுக்கு ஏற்ப மாற்றம் அடைந்திருப்பதுடன், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களுக்கு ஏற்பவும் மாறியுள்ளது.

நம்பகத்தன்மை

செய்திகளுடன், கருத்துக்களை திணிக்கும் ஆரோக்கியமற்ற போக்கும், ஒழுங்கற்ற அம்சங்களும், வரம்பற்ற வகையில் செய்திகளை வெளியிடுவதும் தான் தற்கால விதிமுறைகளாகி விட்டன.

நம்பகத்தன்மையை பாதிக் கக்கூடிய, ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நினைவுப்பரிசு

விழாவில், துக்ளக் பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நினைவுப்பரிசு வழங்கினார். துணை ஜனாதிபதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு குருமூர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.

விழாவில் பா.ஜ.க. மூத்த நிர்வாகி இல.கணேசன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...