மாநில செய்திகள்

தேச முன்னேற்ற திட்டங்களின் பட்டியல் நீளமானதுமுடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறதுபிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் + "||" + All that was thought impossible was accomplished Prime Minister Narendra Modi is proud

தேச முன்னேற்ற திட்டங்களின் பட்டியல் நீளமானதுமுடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறதுபிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

தேச முன்னேற்ற திட்டங்களின் பட்டியல் நீளமானதுமுடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறதுபிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சென்னை, 

இந்தியாவில் முடியாது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சோ ஆற்றிய பணிகள்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த துக்ளக் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:-

இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமுதாயத்தினர் பொங்கல் கொண்டாடும் இந்த திருநாளில் துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. துக்ளக் ஆசிரியராக இருந்த சோ இன்று நம் மத்தியில் இல்லாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுளாக அவர் ஆற்றிய பணிகள் பெருமைக்குரியவை. முதல் பக்கத்தில் வரும் கேலிச் சித்திரம், மக்களுக்கு எளிய முறையில் பல விஷயங்களை புரியச் செய்துவிடும்.

நாட்டுக்கு வழிகாட்டும் விளக்காக தமிழகம் பல நூற்றாண்டுகளாக திகழ்கிறது. பொருளாதார முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தங்கள், உலகத்தின் மிகத் தொன்மையான மொழியின் இருப்பிடம் போன்றவை தமிழ்நாட்டின் சிறப்பு. முக்கிய விழாக்களில் நான் தமிழில் சில வார்த்தைகளை உச்சரிப்பது உண்டு. இது மிகுந்த பெருமைப்படுவதாக பலரும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.

வேலை வாய்ப்புகள்

இரண்டு மிகப் பெரிய ராணுவ தொழிற்சாலை வழித்தடங்களை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டபோது அதில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக தொழிற்சாலைகளை தமிழகம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஜவுளித் தொழில் அதிக பங்களித்துள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு நிதியுதவிகளை செய்து நவீனப்படுத்தி வருகிறது.

மீன்வளம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை மேலும் உயர்த்த மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளது. இதில் தொழில்நுட்ப மேம்பாடு, நிதி உதவி, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பாகக்கூட ஆழ்கடல் மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.

சுற்றுலா முன்னேற்றம்

இந்தியாவில் சுற்றுலாவை வளர்ப்பதில் 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. எங்கள் ஆட்சி அமைவதற்கு முன்பு சுற்றுலாவில் 65-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 34-ம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொருவரும் 15 இடங்களையாவது சுற்றிப்பார்க்கச் செல்லுங்கள். அதுபோல் இந்தியாவில் இருக்கும் உங்கள் நண்பர்களை தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அழையுங்கள். மாமல்லபுரத்தில் சீன அதிபரை நான் சந்தித்துப் பேசிய பிறகு அங்கு சுற்றுலா அதிகரித்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை பகுதிகள், சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாக மாற்றப்படும்.

நீளமான பட்டியல்

எதிர்ப்புகளையும் தாண்டி இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களில் பட்டியல் மிக நீளமானது. இந்த நாட்களில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. முடியாதது என்று நினைத்ததெல்லாம் தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மக்களை தவறாக நடத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...