மாநில செய்திகள்

காவல், தீயணைப்பு, சிறைத்துறையை சேர்ந்த3,186 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + First-Ministerial Medal for 3,186 people Edappadi Palanisamy Announcement

காவல், தீயணைப்பு, சிறைத்துறையை சேர்ந்த3,186 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல், தீயணைப்பு, சிறைத்துறையை சேர்ந்த3,186 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, 3,186 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை, 

பொங்கல் பண்டிகையையொட்டி, 3,186 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் பதக்கம்

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு, காவல் துறையில்(ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3,000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்கப்படுகின்றன. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அதிகாரிகளுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்/ பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்(பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்கப்படுகின்றன.

பதக்கம் மற்றும் பதக்கச்சுருள்

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2020 பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இது தவிர, காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 6 பேர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் முதல்- அமைச்சரால் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
2. 3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பயணம்
இதுவரை 3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று உள்ளனர்.
3. 3,500 குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அரிசி - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
3,500 குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அரிசி வழங்கினார்.
4. கோவை மாநகர பகுதியில் 3,601 பேருக்கு கொரோனா பரிசோதனை - அதிகாரிகள் தகவல்
கோவை மாநகர பகுதியில் 3,601 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.