மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி + "||" + Avaniapuram Jallikattu:Trouble in sending cows to Wadiwasal Light batons

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை

அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது. 

* காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்கன் குளறுபடியால்   மாடு உரிமையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். 

* காளைகலை அடக்கும் வீரர்களுக்கு அண்டா, குக்கர் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகள் வழங்கி அசத்தல்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர் முதல் கார் வரை பரிசுகளாக வழங்கப்பட்டன.
2. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயமடைந்துள்ளனர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை நான்கு மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்
3. விருதுநகர் வழியே செல்லும் மதுரை–குமரி 4 வழிச்சாலையை விரிவுபடுத்த திட்டம் உள்ளதா? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க கோரிக்கை
விருதுநகர் வழியாக செல்லும் மதுரை–குமரி தேசிய நெடுஞ்சாலை தற்போது 4 வழிச்சாலையாக உள்ள நிலையில் இதனை விரிவாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா எனபதை பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
4. தீபாவளியையொட்டி மதுரையில் நள்ளிரவு 2 மணி வரை கடை நடத்தலாம் - ஐகோர்ட்டு அனுமதி
மதுரையில் தீபாவளியையொட்டி நள்ளிரவு 2 மணிவரை கடைகள் நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
5. இரட்டை ரெயில் பாதை பணிக்கு கண்மாய்களில் மண் அள்ள தடை; மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
இரட்டை ரெயில் பாதை பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் கண்மாய்களில் மண் அள்ள தடை விதித்தும், இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.