மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு + "||" + Avaniyapuram Jallikattu Competition Completed

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
மதுரை,

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4 மணிவரையிலும் நடைபெற இருந்தது.   இந்தநிலையில் 130 காளைகள் இன்னும் அவிழ்க்கப்படாததால் கூடுதலாக அரை மணிநேரம் நீட்டிப்பு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு அனுமதி வழங்கியது.

தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில்,  பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 10 பேர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 72 பேர் காயமடைந்தனர். வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளை கூட்டத்தில் பாய்வதால் காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்தாக கூறப்படுகிறது.