பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு படகுப் போட்டி - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு படகுப் போட்டி - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 6:15 PM GMT (Updated: 15 Jan 2020 5:51 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு படகுப் போட்டி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களை கட்டின. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மேக கூட்டங்கள் தரையிறங்கியவாறு செல்கின்றன. மேலும் அங்குள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அதன்படி பொங்கல் பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை கொடைக்கானல் படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு படகுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

Next Story