மாநில செய்திகள்

களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர் + "||" + Kaliyakaviலை Special Sub-Inspector Murder Case: Criminals appeared in court today

களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்

களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்
களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி  துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.


இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.  

இந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை இன்று கன்னியாகுமரி போலீசார் குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.