மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்ஆளுங்கட்சியின் அக்கிரமத்தை மீறி 65 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறோம்பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + In local elections We have achieved 65 per cent victory over the iniquity of the ruling party

உள்ளாட்சி தேர்தலில்ஆளுங்கட்சியின் அக்கிரமத்தை மீறி 65 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறோம்பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில்ஆளுங்கட்சியின் அக்கிரமத்தை மீறி 65 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறோம்பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அக்கிரமத்தை மீறி 65 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
படப்பை, 

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அக்கிரமத்தை மீறி 65 சதவீத வெற்றியை பெற்று இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை ஊராட்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமத்துவ பொங்கல்

சமத்துவபுரம் என்ற பெயரில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் சமத்துவபுரத்தை கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கித் தந்தார். சமத்துவ விழாவாக எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இதற்கு சமத்துவப் பொங்கல் விழா என்று பெயர் சூட்டி, இந்த விழாவை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அரசு சார்பில் கொண்டாடினோம். இன்றைக்கு ஆட்சியில் இல்லை என்றாலும் தி.மு.க. சார்பில் இந்த விழாவை கொண்டாடி வருகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றோம். அதற்குப் பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அண்மையில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு நமக்கு தான் இருந்தது. ஒன்றை மறந்துவிடக் கூடாது.

தி.மு.க. வசப்படுத்தியது

ஆட்சியில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடந்தால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெற்றிபெறுகிறார்கள் என்ற விஷயத்திற்குள் போக விரும்பவில்லை. அது தற்போது தேவையும் இல்லை. அதற்கு முன்னர் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற நேரத்தில் ஆளுங்கட்சி இடங்களை தி.மு.க. வசப்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சி இடங்களை பிடித்த, பறித்த ஒரு வரலாற்றை நாம் பெற்றிருக்கிறோம். சட்டப் பேரவைத் தேர்தல் வந்தால், அது ஒரு ஆட்சிக்காக நடைபெறும் தேர்தல். 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். அரசை கட்டிக் காக்கிற தேர்தல். அந்த தேர்தல் நடந்து முடிந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் வைத்து விடுவார்கள். அப்படி வைக்கும்போது ஆட்சியில் இருப்பவர்கள்தான் அதிக இடங்களைப் பெறுவார்கள். அதுதான் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு உடனடியாக நடத்தவில்லை. 3 வருடம் காலம் தாழ்த்தி தேர்தல் நடத்தினார்கள். அந்த தேர்தலில் எவ்வளவோ அக்கிரமங்கள் நடந்தன. அந்த அக்கிரமங்களை எல்லாம் தாண்டி, வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு மையத்தில் ஆளுங்கட்சி ஆட்கள் உள்ளே நுழைந்து நம்முடைய முகவர்களை விரட்டி, மிரட்டினார்கள். அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம். வெற்றியைக் கூட அறிவிக்க முடியவில்லை. அறிவிக்காமல் தோல்வி அடைந்தவர்களை வெற்றி அடையச் செய்தார்கள். வெற்றி அடைந்தவர்களை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்தார்கள்.

நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தினால் ஓரளவு வெற்றி பெற்றோம். அக்கிரமம், அநியாயத்தை மீறி 65 சதவீதம் வெற்றி பெற்று வந்திருக்கிறோம் என்றால், அது தி.மு.க. இன்றைக்கு கம்பீரமாக வீறுநடை போடக்கூடிய அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் பேசினார்.