மாநில செய்திகள்

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த் + "||" + For talking about the 1971 rally  Can't apologize Rajinikanth

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்
1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;

துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் நடந்தது மறக்கப்படவேண்டிய சம்பவம் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...