இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது - கனிமொழி எம்.பி.


இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 21 Jan 2020 7:50 AM GMT (Updated: 21 Jan 2020 7:50 AM GMT)

இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2019-ம் ஆண்டு செப்டம்பர் - டிசம்பரில்  இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது, படித்த வேலையற்ற இளைஞர்களின் சதவீதம் 60% ஆக உள்ளது.  2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதம் அளவுக்குச் சரியும் என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கணித்துள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுவந்து சரி செய்ய வேண்டும், ஆனால் சரி செய்வார்களா ? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story