மாநில செய்திகள்

பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + Rajinikanth needs to think and speek m.k.stalin

பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக செயற்குழு அவசர கூட்டத்திற்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக செயற்குழுவில் 6 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. 

சிஏஏ, என்பிஆர்வுக்கு எதிராக என்ன செய்யலாம் என வரும் 24-ம் தேதி திமுக கூட்டணி ஆலோசனை நடத்த உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது. 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த கோரி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின்,

ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து, யோசித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.