சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 22 Jan 2020 2:45 AM GMT (Updated: 22 Jan 2020 2:45 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.72க்கும், டீசல் ரூ.71.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமின்றி ரூ.77.72க்கும், டீசல் விலை ரூ.71.90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story