உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் - மு.க.ஸ்டாலின் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2020 4:22 PM GMT (Updated: 25 Jan 2020 4:22 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். அதிமுக அரசு எந்த கொள்கையும் இல்லாத அரசு. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கிறார்.

மக்களை இனத்தால், மொழியால், மதத்தால் பாஜக அரசு பிளவுப்படுத்துகிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் அமைந்தது முதல் இந்தியை திணிக்கிற முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் குடியுரிமை சட்ட திருத்தத்தால் மத ரீதியாக மக்களை பிரிக்கிறது பாஜக.

இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. ஆனால் தமிழக முதலமைச்சர்  பழனிசாமி இது தொடர்பாக வாயே திறக்கவில்லை. 

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த மக்களின் கருத்துகளைப் பெற்று அதை ஜனாதிபதிக்கு, திமுக அனுப்பி வைக்க உள்ளது.  டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த திமுக விடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story