24 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு விருது டெல்லியில் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி வழங்குகிறார்


24 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு விருது   டெல்லியில் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி வழங்குகிறார்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:54 PM GMT (Updated: 25 Jan 2020 11:54 PM GMT)

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 24 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்குகிறார்.

சென்னை, 

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்த காவல்துறையினருக்கு குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது வழங்குவார். அந்த வகையில் 2020-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 660 காவல் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தமிழக போலீஸ் துறையில் 24 அதிகாரிகளுக்கு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

மிக சிறந்த பணிக்கான ஜனாதிபதி விருது மற்றும் சிறப்பான பணிக்கான காவல் விருதுகள் பெறும் காவல் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

தமிழக போலீஸ் அதிகாரிகள்

1. அபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.

2. சைலேஷ்குமார் யாதவ் - கூடுதல் டி.ஜி.பி., சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை.

3. பி.கே.பெத்துவிஜயன் - சூப்பிரண்டு, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, சென்னை.

4. டி.செந்தில்குமார் - கமிஷனர், சேலம்.

5. எஸ்.ராஜேஸ்வரி - சூப்பிரண்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.

6. என்.எம்.மயில்வாகனன் - துணை கமிஷனர், போக்குவரத்து,சென்னை(தெற்குசரகம்).

7. ஆர்.ரவிச்சந்திரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை (பிரிவு-2), சென்னை.

8. கே.சவுந்தரராஜன் - துணை கமிஷனர், ஆயுதப்படை (பிரிவு-1), சென்னை.

9. எஸ்.வசந்தன் - டி.எஸ்.பி., பாதுகாப்பு பிரிவு, சி.ஐ.டி., சென்னை.

10. ஜி.மதியழகன் - டி.எஸ்.பி., லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகர்கோவில்.

11. வி.அனில்குமார் - டி.எஸ்.பி., கிரைம் பிராஞ்ச், சி.ஐ.டி., நெல்லை.

12. கே.சுந்தரராஜ் - உதவி கமிஷனர், மாநகர கிரைம் பிராஞ்ச், திருப்பூர்.

13. எஸ்.ராமதாஸ் - டி.எஸ்.பி., லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சென்னை (தலைமையகம்).

14. என்.ரவிகுமார் - டி.எஸ்.பி., குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., கோவை (சப்-டிவிஷன்).

15. ஜி.ரமேஷ்குமார் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகை.

16. எம்.நந்தகுமார் - இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பிரிவு, சி.ஐ.டி., சென்னை.

17. எம்.நடராஜன் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, ஈரோடு.

18. என்.திருப்பதி - இன்ஸ்பெக்டர், குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., தூத்துக்குடி.

19. எஸ்.அன்வர் பாஷா - உதவி கமிஷனர், போக்குவரத்து அமலாக்கப்பிரிவு (பரங்கிமலை), சென்னை.

20. ஏ.மணிவேலு - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.

21. என்.ஜெயசந்திரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.

22. டி.டேவிட் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.

23. ஜே.பி.சிவகுமார் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.

24. ஒய்.சந்திரசேகரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.

இவர்களுக்கு டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் விருது வழங்குகிறார்.

Next Story