சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள், டீசல் விலை 38 காசுகள் குறைவு


சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள், டீசல் விலை 38 காசுகள் குறைவு
x
தினத்தந்தி 26 Jan 2020 2:18 AM GMT (Updated: 2020-01-26T07:48:48+05:30)

சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் மற்றும் டீசல் விலை 38 காசுகள் இன்று குறைந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று ரூ.77.03க்கும், டீசல் விலை ரூ.71.11க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து ரூ.76.71க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோன்று டீசல் விலை 38 காசுகள் குறைந்து ரூ.70.73க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Next Story