குரூப்-4 தேர்வு முறைகேடு - மேலும் ஒருவர் கைது


குரூப்-4 தேர்வு முறைகேடு - மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2020 5:56 AM GMT (Updated: 2020-01-26T11:26:25+05:30)

குருப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒரு நபரை சிபிஐடிடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை,

குரூப் 4 முறைகேட்டில் சென்னை டிபிஐ-யில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு தாள்களை மாற்றி முறைகேட்டிற்கு உதவியதாக சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தியபோது தேர்வு தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஓம்காந்தனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிபிஐ ஆவண கிளார்க்கான ஓம்காந்தன் தேர்வு தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு முதல் தேர்வுத் தாள்களை கொண்டும் செல்லும் பணியை ஓம்காந்தன் செய்து வந்தார்.

Next Story