மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது + "||" + Tanjore Periya Temple Kumbabishekha poojas Starting today

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்குகிறது.
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, நந்திபெருமான், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, கருவூரார், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.


இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிருநாளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் தடுப்புக்கம்பிகள், வண்ண மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 1-ந்தேதி(சனிக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. மொத்தம் 8 கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) கணபதி ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் பிரவேசபலி நடைபெறுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) சாந்திஹோமம் நடைபெறுகிறது.

30-ந்தேதி (வியாழக்கிழமை) மூர்த்தி ஹோமம், சம்ஹிதாஹோமம் நடைபெறுகிறது. மாலையில் வாஸ்துசாந்தி நடைபெறுகிறது. 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, தீர்த்த சங்கிரஹணம் ஆகியவை நடைபெறுகிறது. 1-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 5-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ‘ஓம்நமசிவாய’ பக்தி கோஷம் விண்ணை முட்டியது
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’... என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது.
2. தஞ்சை பெரிய கோவில் கருவறை மகத்துவம்
உலகப் பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாட்டு பண்பாட்டு கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (5-ந்தேதி) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
3. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு ; 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
4. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. தஞ்சை பெரியகோவிலில் தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
தஞ்சை பெரிய கோவிலில் வருகிற 5-ந்தேதி தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.