திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை


திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2020 6:00 AM GMT (Updated: 2020-01-27T11:30:28+05:30)

திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி: 

திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகு. இன்று காலை காந்தி மார்க்கெட்டில் வைத்து விஜயரகுவை 4 பேர் கொண்ட கும்பல்  வெட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

செல்போன் திருட்டு தொடர்பாக நடந்த மோதலில் விஜயரகு வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு  என்பவரை காந்தி சந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story