துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சி; 4 பேர் கைது


துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சி; 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2020 12:41 PM GMT (Updated: 27 Jan 2020 12:41 PM GMT)

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் வசிக்கிறார். அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் காவல் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 3 மர்ம நபர்கள் வந்து இறங்கினார்கள். அவர்கள் கைகளில் பை வைத்திருந்தனர். அந்த பைகளில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது நாய் குரைத்துவிட்டது. உடனே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் மணிகண்டன் அந்த மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் மணிகண்டன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய 3 மர்ம நபர்களையும் தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story