மாநில செய்திகள்

திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் + "||" + Government of Tamil Nadu Strict action must be taken Emphasis on Pon Radhakrishnan

திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1984-ல் இருந்து பா.ஜனதா கட்சி பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மீதான தாக்குதல் முதல் திருச்சி பா.ஜனதா நிர்வாகி விஜயரகு கொலை வரை நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.


திருச்சி பா.ஜனதா நிர்வாகியை பயங்கரவாதிகள்தான் கொலை செய்து உள்ளனர் என போலீசாரும் உறுதி செய்துள்ளனர். ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்து என்ற பெயரில் யாரும் உணர்வுடன் வாழக்கூடாது. இந்து உணர்வு என்று கொண்டால் கொல்ல தகுதி என்று பயங்கரவாதிகள் நினைக்கின்றனர். இவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்பட கட்சிகள் திட்டமிட்டு துணையாக உள்ளனர். தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்து என்ற மதமே இல்லை என்ற புதிய கருத்தை பரப்பி வருகின்றனர். இந்து தெய்வங்கள் சொந்தமில்லை என்று கூறுகின்றனர். தமிழகத்தில் மதமாற்றங்கள் பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக யார் செயல்பட்டாலும் தாக்கப்படுகின்றனர்.

திருச்சியில் நடந்த கொலை அறிவிக்கப்பட்ட யுத்தமாக நினைக்கிறேன். இந்து என்ற உணர்வுடன் யாரும் வாழக் கூடாது என்பதற்கான யுத்தத்தை தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் கொலை சம்பவம் நடக்கிறது. இதில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நிலை. எந்த மக்களுக்கும் எதிரான செயலை செய்ய மாட்டோம் என்ற உறுதிபாட்டுடன் பிரதமர் மோடி அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு விவசாயிகளின் நலனை காப்பற்ற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளை பாதுகாத்து, அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
3. தமிழக அரசு இனியாவது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இனியாவது தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
5. தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்
தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.