சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைவு


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைவு
x
தினத்தந்தி 28 Jan 2020 3:13 AM GMT (Updated: 28 Jan 2020 3:13 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.56க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.47க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அதன் விலை சற்று குறைந்துள்ளது.

இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.76.44 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.70.33க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story