கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் -உதயநிதி ஸ்டாலின்


கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் -உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Jan 2020 5:05 AM GMT (Updated: 2020-01-28T10:35:27+05:30)

திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், மணமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கூறினார். எது வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டார். திமுகவில் சாதாரண தொண்டர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்காது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story