ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடந்து வருகிறது.
சென்னை,
காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமோ நடத்த தேவையில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 28 ஆம் தேதி (இன்று) டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து இன்று தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story