பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
x
தினத்தந்தி 28 Jan 2020 8:37 AM GMT (Updated: 28 Jan 2020 8:37 AM GMT)

பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்க தலைவர் செல்வக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்க உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சமி நில விவகாரத்தில் பட்டியலினத்தோர் நல ஆணையம் அரசியல் சார்புடன் நடந்துகொள்வதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி அளித்த முரசொலி நிலம் மீதான புகாரில் அரசியல் ஆதாயம் அடையும் வகையில் ஆணையம் விரைந்து செயல்படுவதாகவும்,  பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் தந்த புகாரில் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story