டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு


டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக அரசு செயலாளர் இடமாற்றம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jan 2020 11:23 AM GMT (Updated: 2020-01-28T16:53:43+05:30)

டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததற்காக தமிழக அரசு செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த சந்தோஷ் பாபு கடந்த 2018ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர் சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் அ.தி.மு.க. அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக விருப்பு ஓய்வு முடிவை எடுத்துள்ளார் என சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இதனிடையே, டெண்டர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளர் சந்தோஷ் பாபு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்று மற்றொரு குற்றச்சாட்டை ஸ்டாலின் இன்று கூறியுள்ளார்.

அதிகாரி இடமாற்றம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கி போனது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பாரத் நெட்’, ‘தமிழ் நெட்’ செயலாக்கம் குறித்த பணிகளை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏன் திடீர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்? என கேட்டுள்ள ஸ்டாலின், பாரத் நெட் திட்டம் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Next Story