மாநில செய்திகள்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வி துறை உத்தரவு + "||" + 8th grade students daily 1 hour Special Class - School Education Directive

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வி துறை உத்தரவு
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் நேற்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதேபோன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.