காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் கைது


காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 10:47 AM GMT (Updated: 2020-01-29T18:41:58+05:30)

காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சகோதரிக்கு அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணும் ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ரூபனின் நடவடிக்கை பிடிக்காத அந்த பெண், அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரூபன், தன்னை தொடர்ந்து காதலிக்காவிட்டால் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

மிரட்டலுக்கு அஞ்சாத அந்த பெண் ரூபனை காதலிக்க மறுத்ததால், காதலியின் சகோதரி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலியின் சகோதரி இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரூபனை கைது செய்தனர்.

இதனையடுத்து ரூபன் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட இரு பிரிவுளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் ரூபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story