மாநில செய்திகள்

சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது + "||" + Youth arrested for viewing child pornography in Chennai

சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது

சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது
சென்னை அம்பத்தூரில் ஆபாச படம் பார்த்த இளம் பட்டதாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்கும் விதமாக தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் ஆபாச படம் பார்த்த இளம் பட்டதாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை ஹரிஸ் என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்போனில் பார்த்துள்ளார். 

செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி ஆகியவற்றின் மூலம் ஹரிஸை கண்டுபிடித்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் நேற்று 5-வது நாளாக நடைபெற்றது. போராட்டம் நடக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
2. சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர், சர்வதேச விமான நிலையமாகிறது
சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அமைகிறது. இங்கு இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்தை மெட்ரோ ரெயில், இலகு ரெயில் போக்குவரத்து மூலமாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
3. சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி; கல்வீச்சில் இணை கமிஷனர் காயம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். பதிலுக்கு அவர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இணை கமிஷனர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.
4. சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை
சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
5. சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி: பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.