மகாத்மா காந்திக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை


மகாத்மா காந்திக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை
x
தினத்தந்தி 30 Jan 2020 3:34 AM GMT (Updated: 2020-01-30T09:04:52+05:30)

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 73 வது நினைவு தினமான இன்று அவரது உருவப்படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் அருகே மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்று காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Next Story