அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி போல் இருக்க கூடாது; மணமக்களுக்கு அறிவுரை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்


அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி போல் இருக்க கூடாது; மணமக்களுக்கு அறிவுரை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Jan 2020 3:22 PM GMT (Updated: 2020-01-30T20:52:35+05:30)

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி போல் இருக்க கூடாது என மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இல்ல திருமணத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அவர் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசும்பொழுது, 

மணமக்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி போல் அடிமையாக இருக்க கூடாது.  ஒருவருக்கு ஒருவர் உரிமையை விட்டு கொடுக்காமல் வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Next Story