ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி


ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2020 2:34 AM GMT (Updated: 2020-01-31T08:04:39+05:30)

ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையின் ஊழியர் சக ஊழியர் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.

சென்னை,

சென்னை அருகே ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்த போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நீலம்சின்ஹா என்ற ஊழியர், தனது சக ஊழியரான கிரிஜேஷ்குமார் என்பரை நோக்கி துப்பக்கியால் சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரிஜேஷ்குமார் மீது ஆறு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த கிரிஜேஷ்குமார் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீலம்சின்ஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சக ஊழியர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story