மாநில செய்திகள்

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு + "||" + Case to Rescue Tamils in China : Central state governments have been ordered to respond

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சீனாவில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் வசித்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் உள்ள 400 இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் ஒன்று சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாளை அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் தமிழர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர உத்தரவிடக்கோரி சமயசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.
2. சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ஜியாங்கில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
4. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்
சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. அங்கு ஒரே நாளில் 100 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
5. போலீஸ் தேர்வு பணிகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவு - தமிழர்கள் நேர்மையை இழந்துவிட்டதாக நீதிபதி கருத்து
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான ஒட்டுமொத்த தேர்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.