சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்


சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 31 Jan 2020 10:33 AM GMT (Updated: 2020-01-31T16:03:01+05:30)

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு  இல்லை. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.  மக்கள் பீதி அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

Next Story