தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் 7-ந்தேதி கோர்ட்டு புறக்கணிப்பு


தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் 7-ந்தேதி கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 3:16 AM GMT (Updated: 3 Feb 2020 3:16 AM GMT)

தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் 7-ந்தேதி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சகாபுதீன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் மகேஷ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் 7-ந்தேதி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து மாநில தலைவர் நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய குற்றவியல் நடைமுறை விதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதின் காரணமாகவும், அந்த நடைமுறை விதிகளை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 7-ந்தேதி ஒருநாள் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story