மாநில செய்திகள்

இளைஞர்கள் இருப்பதால் பா.ம.க.வுக்கு அன்னிய அறிவு தேவை இல்லை - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு + "||" + MPs do not need foreign knowledge because they are young people - Dr Ramadas Twitter

இளைஞர்கள் இருப்பதால் பா.ம.க.வுக்கு அன்னிய அறிவு தேவை இல்லை - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு

இளைஞர்கள் இருப்பதால் பா.ம.க.வுக்கு அன்னிய அறிவு தேவை இல்லை - டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
இளைஞர்கள் இருப்பதால் பா.ம.க.வுக்கு அன்னிய அறிவு தேவை இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை,

எந்த தேர்தலாக இருந்தாலும் பா.ம.க.வின் வெற்றியை தலைமையின் வழி காட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம். அவர்களுக்காக உழைப்போம். அவர்களால் வெல்வோம்.

வெற்றிடங்களை தான் காற்று நிரப்பும். பா.ம.க. அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பா.ம.க. உடன் இரண்டற கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அன்னிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோர் அமைப்புடன் இணைந்து தி.மு.க. சந்திக்க உள்ளது குறித்து விமர்சனம் செய்யும் வகையில் இந்த பதிவினை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்து இருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...