மாநில செய்திகள்

திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் - கி.வீரமணி அறிக்கை + "||" + Dravidar League Working Committee Meeting in Trichy on 21st

திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் - கி.வீரமணி அறிக்கை

திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் -  கி.வீரமணி அறிக்கை
திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிப் பாதையில், ‘நீட்’ என்றும், புதிய மத்தியக் கல்விக் கொள்கை என்றும் கண்ணிவெடிகளை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதைத்து வைத்துள்ள பேரபாயம் நீடிக்கிறது. 

இதைப் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் விழிப்புணர்வு இயக்கமாக கடந்த ஜனவரி 20-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கிய நமது கல்வி மீட்டெடுப்பு கடமைப் பயணம் சென்னையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடுத்த களத்திற்கான ஆயத்தத்திற்குத் தொடக்கமாக திருச்சியில் வருகிற 21-ந்தேதி திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திடமான போராட்ட அறிவிப்புகள் வெளிவரும். பெரியார் என்றும் வாழ்வார்; எப்போதும், எவருக்கும் தேவைப்படுவார். தொண்டர்களே களம் காண ஆயத்தமாவீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பரபரப்பு: ராணுவ கேண்டீனில் மதுபாட்டில்கள் கேட்டு முன்னாள் வீரர்கள் வாக்குவாதம்
திருச்சியில் ராணுவ கேண்டீனில் மதுபாட்டில்கள் கேட்டு முன்னாள் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு செருப்பு, ஹெல்மெட், குடைகள் வைத்து இடம் பிடித்த மதுப்பிரியர்கள்
திருச்சியில் டாஸ்மாக் கடைமுன்பு செருப்பு, ஹெல்மெட், குடைகள் வைத்து மதுப்பிரியர்கள் இடம் பிடித்தனர்.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: போலீஸ் கட்டுப்பாட்டில் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம்
திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நடைமேடைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
4. திருச்சி-திருப்பைஞ்சீலி இடையே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ் நடுவழியில் பயணிகள் அவதி
திருச்சி-திருப்பைஞ்சீலி இடையே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்சால் நடுவழியில் மாற்று பஸ்சுக்காக காத்திருந்து பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
5. திருச்சியில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய தம்பதி கைது
திருச்சியில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-