தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு ; 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது


தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு ; 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது
x
தினத்தந்தி 5 Feb 2020 4:15 AM GMT (Updated: 5 Feb 2020 4:57 AM GMT)

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை,

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு  நடைபெற்றது. ராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.  

குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து  கும்பங்களுக்கும் மஹாதீபாரதனை நடைபெற்றது.  தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.  ராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் குடமுழுக்கு நடைபெற்றதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.பெரியநாயகி அம்மன், பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

 மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும், 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 5,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குடமுழுக்கையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Next Story