5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: இது மக்களின் அரசு என மீண்டும் நிரூபித்துள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: இது மக்களின் அரசு என மீண்டும் நிரூபித்துள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
தினத்தந்தி 6 Feb 2020 9:06 AM GMT (Updated: 6 Feb 2020 9:06 AM GMT)

பொதுமக்களின் கருத்தை ஏற்று 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து இது மக்களின் அரசு என மீண்டும் நிரூபித்துள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஆவடியில் அம்மா திருமண மண்டப பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

விஜய் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியலுடன் முடிச்சுப்போடத் தேவையில்லை. மாணவர்களுக்கு தந்தையாக, சகோதரனாக இருந்து ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.  சிஏஏவுக்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும். கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் விட்டு வைத்துள்ளது?

பொதுமக்களின் கருத்தை ஏற்று 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து இது மக்களின் அரசு என மீண்டும் நிரூபித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து, அதன் வேரை அழிக்கும் வேலையை அமைச்சர் ஜெயக்குமார் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story